வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்
அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும். வி.ஏ.ஓ. பதவி உயர்வு 10 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டாக குறைக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பதவி உயர்வு 10 என்பதே 5 ஆண்டாக குறைக்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கருணாகரன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அரசகுமார், மாவட்ட செயலாளர் தனலட்சுமி, இணைச் செயலாளர்கள் குணசேகரன், இளமதி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story