வாகனம் மோதி புள்ளி மான் சாவு


வாகனம் மோதி புள்ளி மான் சாவு
x
வாகனம் மோதி புள்ளி மான் சாவு
தினத்தந்தி 27 Feb 2021 12:30 AM IST (Updated: 27 Feb 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி புள்ளி மான் சாவு

விராலிமலை
விராலிமலை அருகே சமத்துவபுரம் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் ஓரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமார் 4 வயது மதிக்கத்தக்க புள்ளி மான் இறந்து கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதியினர் விராலிமலை வனத்துறை வனவர் கருப்பையாவிற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனவர் கருப்பையா பார்வையிட்டு மேல் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கால்நடை மருத்துவர் இறந்த மானை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் வனத்துறையினர் லிங்கமலை வனப்பகுதியில் புள்ளி மானை புதைத்தனர்.

Next Story