வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்


வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2021 12:31 AM IST (Updated: 27 Feb 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கரூர்
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை எதிர்த்து நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ரங்கன், தேசிய வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு நாகராஜ், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் செல்வராஜ் உள்பட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story