மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் + "||" + Transgender people

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லாலாபேட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், மிகவும் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாலாபேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவி கண்ணகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதுகுறித்து அறிந்த கிருஷ்ணராயபுரம் மண்டல தாசில்தார் பிரபாகரன் நேரில் வந்து மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் வசதிக்காக பேட்டரி கார் வசதி
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் வசதிக்காக பேட்டரி கார் வசதி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
2. மாற்றுத்திறனாளிகள்-மாற்று குறையாத தங்கங்கள்
ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோ இந்த ஆண்டு 2 பெருமைகளை பெற்றிருக்கிறது. ஒலிம்பிக் போட்டி முதலில் டோக்கியாவில்தான் நடந்தது. அந்த போட்டி முடிந்தவுடனே பாராஒலிம்பிக் என்று கூறப்படும் பாரலல் ஒலிம்பிக் அதாவது ஒலிம்பிக் போட்டிக்கு இணையாக கருதப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியும் டோக்கியோவில் நடந்தது.
3. மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ஐகோர்ட் இடைக்கால தடை
நிதி நெருக்கடி காரணமாக 10% பேருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
5. பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்
பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.