கே.புதுப்பட்டியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்


கே.புதுப்பட்டியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x
தினத்தந்தி 27 Feb 2021 12:41 AM IST (Updated: 27 Feb 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

கே.புதுப்பட்டியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

அரிமளம்:
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டியில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை அரிமளம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடையக்குடி திலகர் தொடங்கி வைத்தார். பந்தயத்தில் பெரிய மாடு, நடு மாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன. 
 பெரிய மாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 19 ேஜாடி மாடுகளும் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமும், சிறிய மாடு போய் வர 6 மைல் தூரமும் போட்டி தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 
 பெரிய மாடு பிரிவு 
இதில் பெரிய மாடு பிரிவில் கே.புதுப்பட்டி கே.அம்பாள் மாட்டு வண்டி முதல் பரிசையும், இரண்டாம் பரிசை பல்லவராயன்பட்டி வரிசை இளமாறன், மூன்றாம் பரிசை வெட்டுக்காடு கணேசன், நான்காம் பரிசை மதுரை மாவட்டம் ஏ.வெள்ளாளப்பட்டி கர்க்காத்தால் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. 
பந்தயம் நடைபெற்ற கே.புதுப்பட்டி காரைக்குடி- சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டிருந்து மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை கண்டுகளித்தனர்.
பரிசு
நடு மாடு பந்தயத்தில் முதல் பரிசை கருப்பூர் வீரய்யா சேர்வை மாட்டு வண்டியும், இரண்டாம் பரிசை மேல்நிலைப்பட்டி மென்னாண்டார்மூர்த்தி கருப்பையா அம்பலம், மூன்றாம் பரிசு காரைக்குடி கருப்பண்ணன் சேவை, நான்காம் பரிசு கே.புதுப்பட்டி கவுசல்யா ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. பந்தயம் தொடக்கம் மற்றும் முடிவு எல்லையில் கொடி வாங்கிக்கொண்டு திரும்பிய முதல் மூன்று சாரதிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் 12 சாரதிகளுக்கு அ.தி.மு.க. மாவட்ட வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் கே.பி.ஆர்.சி.முருகன் பரிசுகளை வழங்கினார். 
போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

Next Story