சிலட்டூரில் வடமாடு ஜல்லிக்கட்டு


சிலட்டூரில் வடமாடு ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 27 Feb 2021 12:50 AM IST (Updated: 27 Feb 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

சிலட்டூரில் வடமாடு ஜல்லிக்கட்டு

அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே சிலட்டூர் கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வடமாடு ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 13 காளைகள் கலந்து கொண்டன. ஒரு காளையை அடக்குவதற்கு 9 வீரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மைதானத்தில் காளை விளையாடுவதற்கு 20 நிமிடம் வழங்கப்பட்டது. காளைகளை அடக்கியவர்களுக்கு ரூ.7 ஆயிரமும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் அறந்தாங்கி போலீசார் ஈடுபட்டு இருந்தனர். வடமாடு ஜல்லிக்கட்டை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். 

Next Story