போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி போக்குவரத்து பணிமனை முன்பு ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.காரியாபட்டி போக்குவரத்து பணிமனையில் இருந்து 17 பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 15 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். காரியாபட்டி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story