காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம்


காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2021 1:08 AM IST (Updated: 27 Feb 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

கரூர் நேற்று காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

 கரூர்
கருத்துக்கேட்பு கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாசுக்காட்டுபாட்டு வாரியம் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் (பகுதி-1) குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், வறட்சிக்குள்ளான கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் குடிநீர் தேவைகளை தக்க வைத்து கொள்ளுவதற்கும், நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்கும், வெள்ள நீரை சேகரித்து திசை திருப்புவதற்கும் மற்றும் கனமழையினால் காவிரியில் செல்லும் வெள்ளநீரை முறையாக சேகரித்து வைத்து அதை காவிரி -கட்டளை முதல் தென்வெள்ளாறு நதி வரை கொண்டு சேர்க்கும் வகையில் வெள்ளநீர் கால்வாய் உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டம் குறித்து விளக்கமாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எடுத்துரைத்தப்பின், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாகவும், தெளிவாகவும் பதிவு செய்ய வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கை மனு
பின்னர் இத்திட்டம் குறித்து பொதுப்பணித்துறை சார்பில் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 40 பேர் இத்திட்டம் குறித்த தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டு கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட கருத்துகள் மற்றும் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
இதில், காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட வருவாய் அலுவலர் முருகேசன், கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story