திருவிழா காண வந்த வாலிபர் குளத்தில் மூழ்கி சாவு


திருவிழா காண வந்த வாலிபர் குளத்தில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 27 Feb 2021 1:10 AM IST (Updated: 27 Feb 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

திருவிழா காண வந்த வாலிபர் குளத்தில் மூழ்கி சாவு

ஆலங்குடி:
ஆலங்குடி அருகில் உள்ள வாராப்பூரில் நேற்று புள்ளிச்சோறு எறிதல் என்னும் வினோத திருவிழா நடைபெற்றது. இதை பார்ப்பதற்காக நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா கொளப்பள்ளியிலிருந்து ஏகாம்பரம் மகன் பார்த்திபன் (வயது 23) மழையூர் அருகே உள்ள தீத்தானிப்பட்டியில் தனது உறவினர் வீட்டிற்கு வந்தார். கோவிலுக்கு போவதற்காக தீத்தானிப்பட்டியில் உள்ள ஊர் பொதுக்குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். குளத்தில் பார்த்திபன் நீச்சல் தெரியாமல் அதிக அளவு உள்ளே சென்று குளித்துள்ளார். அப்போது நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில், வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் குளத்தில் மூழ்கி இறந்த பார்த்திபன் உடலை மீட்டு வெளிேய கொண்டு வந்தனர். இதுகுறித்து மழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழா காணவந்த வாலிபர் குளத்தில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தயது.

Next Story