கருநகிரி பெருமாள் கோவில் தேரோட்டம்
கருநகிரி பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
தரகம்பட்டி
தரகம்பட்டி அருகே கடவூரில் கருநகிரி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்தாண்டு தேரோட்டம் கடந்த 18-ந் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பெருமாள் தினசரி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்தார். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் பெருமாள் எழுந்தருளினார். இதையடுத்து தேரோட்டத்தை கடவூர் ஜமீன்தார் மோகன்குமார் முத்தையா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ேதர் கோவிலை சுற்றி நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story