50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன
மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்ந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
விருதுநகர்,
மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்ந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
தொடரும் போராட்டம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களது 14-வது ஊதிய பேச்சுவார்த்தை முடிவடையாததை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
நேற்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. நேற்று காலையில் 6 மணிக்கு மேல் தான் பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் 35 சதவீத பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் நேற்று 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
பெரும் பாதிப்பு
மொத்தமுள்ள 355 பஸ்களில் 178 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 106 டவுண் பஸ்களும், 72 வெளியூர் பஸ்களும் அடங்கும். பஸ்கள் தாமதமாக இயக்கப்பட்டதாலும் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதாலும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
தனியார் பஸ்கள் கால அட்டவணையின்றி செயல்பட்டதால் அவைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரை மினி பஸ்கள் இயக்கப்பட்டன.
தவிப்பு
தென் மாவட்டங்களுக்கான ெரயில்கள் விருதுநகரில் நிறுத்தப்பட்டதால் தொலை தூரத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகளும் விருதுநகரிலிருந்து உரிய நேரத்தில் பஸ் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
பஸ்நிலையத்தில் உரிய போலீஸ் பாதுகாப்பு போடப் பட வில்லை. மாணவ-மாணவிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். கிராமங்களில் இருந்து வேலைக்கு வருபவர்கள் வேலைக்கு உரிய நேரத்தில் செல்லமுடியாத நிலையில் பாதிப்படைந்தனர்.
Related Tags :
Next Story