இயற்கை விவசாயிக்கு நெல் பாதுகாவலர் விருது


இயற்கை விவசாயிக்கு நெல் பாதுகாவலர் விருது
x
தினத்தந்தி 27 Feb 2021 1:38 AM IST (Updated: 27 Feb 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே இயற்கை விவசாயிக்கு நெல் பாதுகாவலர் விருது வழங்கினார்.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள உலகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி சிவராமன். இவர் 2019-2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரம்பரிய நெல் விளைவிக்கும் போட்டியில் தமிழக அளவில் கலந்து கொண்டார். இந்த நிலையில் சிவராமன் இயற்கை முறையில் உலகம்பட்டியில் கிச்சடி சம்பா நெல் ரகம் சாகுபடி செய்து தமிழக அளவில் 3-ம் இடத்தை பிடித்தார். அதனை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு வேளாண்மை துறை சார்பில் மாநில அளவிலான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது, சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. பாரம்பரிய விருது பெற்றவரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

Next Story