அரசு பஸ்சை வழிமறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்


அரசு பஸ்சை வழிமறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2021 1:48 AM IST (Updated: 27 Feb 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் அரசு பஸ்சை வழிமறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். ஆட்டோ டிரைவர்களை வைத்து அரசு பஸ்களை இயக்குவதாக குற்றம் சாட்டினார்கள்.

தேவகோட்டை,

தேவகோட்டையில் அரசு பஸ்சை வழிமறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். ஆட்டோ டிரைவர்களை வைத்து அரசு பஸ்களை இயக்குவதாக குற்றம் சாட்டினார்கள்.

முற்றுகை போராட்டம்
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர் பல இடங்களில் அரசு பஸ்கள் மாற்று டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் நேற்று காலை 10 மணி அளவில் ஆட்டோ ஓட்டுனரை கொண்டு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து தொழிலாளர்களிடையே வதந்தி பரவியது.
இதைத்தொடர்ந்து நேற்று ராம் நகரில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு அனைத்து தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.. பின்னர் பணிமனையில் இருந்து வெளியே வந்த பஸ்சை வழிமறித்து போக விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை
அப்போது அவர்கள், அனுபவமிக்க டிரைவர்களை கொண்டு பஸ்களை இயக்க வேண்டும். அப்போதுதான் விபத்து இல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று வலியுறுத்தினர். இதை தொடர்ந்து ஒரு மணிநேரம் பஸ்சை வெளியே விடாமல் தடுத்து நிறுத்தி வைத்தனர். அதன் பின்பு தகவல் அறிந்து அங்கு வந்த தாசில்தார் ராஜரத்தினம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபிஉமா ஆகியோர் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் நன்கு அனுபவமிக்க டிரைவர்களை கொண்டு இயக்குவதாகவும் அனுபவம் இல்லாதவர்களை இயக்க மாட்டோம் என உறுதி கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதன் பின்னர் பணிமனையில் இருந்து 2 பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story