விவசாய பணிகள் மும்முரம்
தளவாய்புரம் பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தளவாய்புரம்,
தளவாய்புரம் பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
நெல் அறுவடை
தளவாய்புரம், சேத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முகவூர், சொக்கநாதன்புத்தூர், தேவதானம், சேத்தூர், சோலைசேரி, சுந்தரராஜபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஏற்கனவே பயிரிட்டு இருந்த நெல் பயிரை கடந்த மாதம் அறுவடை செய்தனர்.
இதையடுத்து தற்போது இப்பகுதிகளில் விவசாயிகள் வயலில் அடுத்த மகசூல் செய்ய நிலத்தை டிராக்டர் மூலம் உழும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாற்று நடும் பணி
மற்றொரு புரம் உழுத நிலத்தில் நாற்று நடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை விட இந்த பகுதிகளில் கூடுதலாக மழை பெய்ததால் தற்போது இங்குள்ள அனைத்து கண்மாய் மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆதலால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story