தேர்தல் நடத்தை விதிகள் அமல் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சீல் வைப்பு


தேர்தல் நடத்தை விதிகள் அமல்  கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 2:04 AM IST (Updated: 27 Feb 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சீல் வைப்பு

கடலூர், 
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 15-வது சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் தேர்தல் தேதி நெருங்கி வந்ததால், அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த சில வாரங்களாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, தங்களது கட்சிக்கு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். இதுதவிர கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே தமிழக தேர்தல் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்வதற்காக கடந்த 10-ந் தேதி இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் சென்னை வந்து, அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்தனர். பிறகு தேர்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி சென்றனர். இந்த நிலையில் சட்டசபை தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா நேற்று மாலை வெளியிட்டார். அதன்படி 234 இடங்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.
இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி கடலூர் பீச்ரோட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு, நேற்று இரவு 7 மணி அளவில் தாசில்தார் பலராமன் சீல் வைத்தார். 

Next Story