போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
சாத்தூர்,
சாத்தூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சாத்தூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக 2-வது நாள் வேலை நிறுத்தம், பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தலைவர் தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். மத்திய சங்க நிர்வாக உறுப்பினர் அழகுராஜ் முன்னிலை வகித்தார். இதில் ம.தி.மு.க தொழிற்சங்க செயலாளர் பரசுராமன், விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க தலைவர் முருகேசன், பார்வர்டு பிளாக் தொழிற்சங்க செயலாளர் பாலசுந்தரம், புதிய தமிழக தொழிற்சங்க செயலாளர் அழகர்சாமி, அலுவலக பணிமனை சங்கச் செயலாளர் வீரபாண்டி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
தமிழக அரசு சம்பள பேச்சு வார்த்தையை உடனே பேசி முடித்து விட வேண்டும்.
19 மாத காலமாக பேசி முடிவு எடுக்காமல் இழுத்து அளிப்பதை கண்டித்தும், வெளிநபர்களை வைத்து பஸ்களை இயக்கி விபத்துகள் உருவாகுவதை தடுக்க வேண்டும். 67 மாதமாக பஞ்சப்படி வழங்காததை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன்களை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story