அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு


அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 2:22 AM IST (Updated: 27 Feb 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

திருமங்கலம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் டிரைவர் மாரியப்பன் (வயது 42). நடத்துனர் ஈஸ்வரன். இவர்கள் இருவரும் செங்கோட்டை அரசு விரைவு பஸ் பணிமனையில் பணியாற்றி வருகின்றனர். செங்கோட்டையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக அரசு விரைவு பஸ் 35 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. திருமங்கலம் மறவன்குளம் அருகே வரும்போது மர்ம நபர்கள் இருவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடி சேதம் அடைந்தது. இச்சம்பவம் குறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story