ரூ.12 லட்சத்தில் புதிய செல்போன் கோபுரம் அமைக்கும் பணி


ரூ.12 லட்சத்தில் புதிய செல்போன் கோபுரம் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 27 Feb 2021 2:26 AM IST (Updated: 27 Feb 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

பிரான்மலை அருகே ரூ.12 லட்சத்தில் புதிய செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி தாலுகா பிரான்மலை அருகே மலைப்பிரதேச பகுதியான மேலவண்ணாருப்பு பகுதி உள்ளது. இங்குள்ள மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக தொலைதொடர்பு வசதி இல்லாமல் இருந்து வருகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் ஆன்லைனில் பாடங்கள் படிக்க முடியாத நிலையால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மாவட்டக்குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஏர்டெல் நிறுவனம் சார்பாக அமைக்க இருக்கும் ரூ.12 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்து பேசினார். இந்த செல்போன் கோபுரம் அமைப்பதற்கு அவர் தனது சொந்த நிதியை வழங்கி உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மேலவண்ணாருப்பு ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிபித்திரை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம், ஒன்றிய குழு தலைவர் விஜயா குமரன், அக்ரோ தலைவர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகர்சாமி, காட்டாம்பூர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story