சேலம் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Feb 2021 9:20 PM GMT (Updated: 26 Feb 2021 9:20 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 10 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. . இவர்கள் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Next Story