சங்ககிரி அருகே வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்


சங்ககிரி அருகே  வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்
x
தினத்தந்தி 26 Feb 2021 9:22 PM GMT (Updated: 26 Feb 2021 9:22 PM GMT)

சங்ககிரி அருகே வேன் கவிழ்ந்து 12 பேர் காயம் அடைந்தனர்.

சங்ககிரி:
சேலம் நரசோதிபட்டி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 31). டிராவல்ஸ் டிரைவராக உள்ளார். இவர் நேற்று மதியம் 1 மணி அளவில் ராசிபுரம் டி.மேட்டூர் பகுதியில் 20 பேரை ஏற்றிக்கொண்டு ஈரோடு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். சங்ககிரி அருகே சென்றபோது வேன் ரோடு ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த சிவராமன், ராஜகோபால் உள்பட 12 பேர் லேசான காயம் அடைந்தனர். சங்ககிரி அரசு மருத்துவமனை முதலுதவி சிகிச்சை அளித்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story