ரெயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து விற்றவர் கைது


ரெயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து விற்றவர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2021 3:00 AM IST (Updated: 27 Feb 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் சட்ட விரோதமாக ரெயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்:
தஞ்சையில் சட்ட விரோதமாக ரெயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
முறைகேடாக டிக்கெட் விற்பனை
 
தஞ்சை பகுதிகளில் சட்ட விரோதமாக ரெயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்வதாக ரெயில்வே பாதுகாப்புபடை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து திருச்சி மண்டல ரெயில்வே பாதுகாப்பு படை கமி‌‌ஷனர் ராமகிரு‌‌ஷ்ணன், துணை கமி‌‌ஷனர் சின்னதுரை ஆகியோர் உத்தரவின் பேரில் தஞ்சை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாச்சலம், மணிவண்ணன் மற்றும் போலீசார் தஞ்சை நகரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள கணினி மையத்தில் விதிமுறைகளை மீறி பல்வேறு பயனாளர் கணக்குகளை உருவாக்கி சட்ட விரோதமாக ரெயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 95-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அவற்றை அதிக விலைக்கு விற்றது தெரிய வந்தது.
கம்ப்யூட்டர் பறிமுதல் 
இதையடுத்து அந்த மையத்தின் உரிமையாளர் சேக்அப்துல்லாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டர், மானிட்டர், பிரிண்டர், செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story