ரெயில்வே தனியார் மயத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து போராட்டம் எஸ்.ஆர்.எம்.யு. மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் தகவல்
ரெயில்வே தனியார் மயத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என எஸ்.ஆர்.எம்.யு. மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் கூறினார்.
ரெயில்வே தனியார் மயத்தை கண்டித்து
அனைத்து தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து போராட்டம்
எஸ்.ஆர்.எம்.யு. மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் தகவல்
திருச்சி,
ரெயில்வே தனியார் மயத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என எஸ்.ஆர்.எம்.யு. மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் கூறினார்.
சிறப்பு கூட்டம்
எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தின் திருச்சி-பொன்மலை கோட்ட செயல்வீரர்கள் சிறப்பு கூட்டம் நேற்று திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலைய பார்சல் அலுவலகம் அருகில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.
இதில் எஸ்.ஆர். எம்.யு.மண்டல தலைவரும், எச்.எம்.எஸ். அகில இந்திய தலைவருமான ராஜா ஸ்ரீதர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆட்சி செய்வது மட்டும் தான் எங்கள் வேலை தொழில் செய்வது எங்கள் வேலை அல்ல என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். ரெயில்வே என்பது தொழில் துறை அல்ல. அது மக்களுக்கான ஒரு சேவை துறை. எனவே தனியார் மயம் என்ற பெயரில் மோடி பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடும் திட்டத்தை கைவிட வேண்டும். ரெயில்வேயை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகின்றன. இதனால் ரெயில் பயணிகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். 400 ரெயில் நிலையங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதன் மூலம் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.
போராட்டம்
தனியார் மயமாக்கப்படும் வழித்தடங்களில் உயர் வகுப்பு பயணிகளுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் வழங்கப்படும். தனியார்கள் வருவாயை தான் பார்ப்பார்கள். கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட பணிகள் ரெயில்களை மீண்டும் இயக்கவேண்டும். ரெயில்வே தனியார்மயத்திற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story