குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
வையம்பட்டி,
வையம்பட்டி ஒன்றியம், செக்கணம் ஊராட்சிக்குட்பட்ட மூக்கரெட்டியபட்டி, நத்தத்தார் மேடு ஆகிய பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டு வந்ததுடன் இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீரை தேடி அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் நேற்று வையம்பட்டி கரூர் சாலையில் தனியார் திருமண மண்டபத்திற்கு முன்பு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்ட நிலையில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
Related Tags :
Next Story