மாநகராட்சி கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட தரைக்கடை வியாபாரிகள்
மாநகராட்சி கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட தரைக்கடை வியாபாரிகள்
திருச்சி,
திருச்சி மாவட்ட தள்ளுவண்டி, தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தள்ளுவண்டியில் முக கவசம் விற்பனை செய்தவர்களின் கடையை இரவோடு, இரவாக அகற்றிய மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையரை கண்டித்து இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யு.தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் பேசினார். தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வி, மாநகர் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் ஆகியோரும் பேசினார்கள். முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து பேசுவதற்காக சங்க நிர்வாகிகளை போலீசார் அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story