மணப்பாறை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


மணப்பாறை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2021 3:32 AM IST (Updated: 27 Feb 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணப்பாறை, 

கல்லூரி மாணவி தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மரவனூர் அருகே உள்ள இடையபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது 20). கடந்த 1¾ ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது தாய் வீட்டில் வசித்து வந்த கஸ்தூரி, தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். 

ஆர்.டி.ஒ. விசாரணை

பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவிக்கு திருமணம் ஆகி 1¾ ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றுவருகிறது.

Next Story