எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு ‘சீல்’


எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 27 Feb 2021 3:33 AM IST (Updated: 27 Feb 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு ‘சீல்’

தேர்தல் நடத்தை விதிகள் அமல்:
திருச்சி, 
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. மே மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. முதற்கட்டமாக திருச்சியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. திருச்சி மேலரண்சாலையில் உள்ள கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்தில் சேர்கள், கொடிகள், பேனர்கள், ஏ.சி. எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அகற்றப்பட்ட பிறகு, பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான வளர்மதி அலுவலகத்தையும், உறையூர் பகுதியில் உள்ள மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.நேரு அலுவலகத்தையும் பூட்டி சீல் வைத்தனர்.

Next Story