முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 27 Feb 2021 6:41 AM IST (Updated: 27 Feb 2021 6:41 AM IST)
t-max-icont-min-icon

பரப்பாடியில் முககவசம் அணியாதவர்களுக்கு சுகாதார துறையினர் அபராதம் விதித்தனர்.

இட்டமொழி:
நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன் மற்றும் வடக்கு விஜயநாராயணம் போலீசார் உள்ளிட்ட குழுவினர் நேற்று பரப்பாடி மெயின் பஜாரில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தினர்.

Next Story