அரும்பாக்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்; அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்


அரும்பாக்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்; அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 27 Feb 2021 5:15 PM IST (Updated: 27 Feb 2021 5:15 PM IST)
t-max-icont-min-icon

அரும்பாக்கத்தில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்.

ஆக்கிரமிப்பு கடைகள்
சென்னை அரும்பாக்கத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயின் ஒரு பகுதியில் இணைப்பு பணிகள் முழுமை அடையாத நிலையில் அந்த பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்து கால்வாயின் அருகே கடைகளை கட்டி இருந்தனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பேரில் ஒரு சிலர் தாமாக முன்வந்து கட்டிடங்களை அகற்றினார்கள். ஆனால் சிலர் கடைகளை அகற்றவில்லை.

இடித்து அகற்றம்
இந்தநிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலையோரம் ஆக்கிரமித்து கட்டி இருந்த கடைகளின் முன்பகுதிகளை பொக்லைன் எந்திரம் கொண்டு இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், அங்கு ஆக்கிரமித்து கட்டிஇருந்த கடைகளை இடித்து தள்ளினார்கள். ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றிய பிறகு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி முடிவடையும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story