65 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
65 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த மாதம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முழுக்கொள்ளளவை எட்டியது.
இதனையடுத்து வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு கால்வாய் வழியாகவும், ஆற்று வழியாகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
எனினும் அணைக்கு நீர்வரத்து இருந்ததால் நீர்மட்டம் 17 நாட்களுக்கும் மேலாக முழுக்கொள்ளளவில் நீடித்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து தற்போது அடியோடு நின்றுவிட்டது.
நீர்வரத்து இல்லாத நிலையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 620 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 65.52 அடியாக இருந்தது.
இதனிடையே வைகை அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story