சாத்தான்குளம் அருகே 8 ஆடுகளை கடித்துக் கொன்றது சிறுத்தைப்புலியா?


சாத்தான்குளம் அருகே 8 ஆடுகளை கடித்துக் கொன்றது சிறுத்தைப்புலியா?
x
தினத்தந்தி 27 Feb 2021 6:56 PM IST (Updated: 27 Feb 2021 6:56 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே 8 ஆடுகளை கடித்துக் கொன்றது சிறுத்தைப்புலியா? என வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம், பிப்:

சாத்தான்குளம் அருகே வயலில் 8 ஆடுகள் செத்து கிடந்தன. இதனை கடித்துக் கொன்றது சிறுத்தைப்புலியா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடுகள் சாவு

சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். விவசாயியான இவர் ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இரவு தனது வயலில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் 8 ஆடுகளை கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். 

காலையில் வந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 8 ஆடுகளும் ஆங்காங்கே ரத்தத் காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறுத்தைப்புலி தனது ஆடுகளை கடித்து கொன்று விட்டதாக சேகர் தெரிவித்தார். ஆடுகளின் கழுத்து பகுதி மட்டும் கடித்து தின்று உள்ளதாகவும், 2 ஆடுகள் முழுவதுமாக உண்ணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வனத்துறையினர் விசாரணை

மேலும் இதே பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் மாடுகளை சிறுத்தை கடித்து உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தையை பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை    விடுத்துள்ளனர்.

எனவே சாத்தான்குளம் பகுதியில் ஆடுகளை கடித்து குதறியது சிறுத்தைப்புலியா அல்லது வேறு ஏதேனும் மர்ம விலங்கு கடித்துள்ளதா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story