கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசித் திருவிழா


கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசித் திருவிழா
x
தினத்தந்தி 27 Feb 2021 7:01 PM IST (Updated: 27 Feb 2021 7:01 PM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசித் திருவிழா நடந்தது.

கழுகுமலை, பிப்:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் மாசித் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மாசித் திருவிழா

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூச தேரோட்டம், மாசி மகம், பங்குனி உத்திரம் தேரோட்டம் ஆகிய திருவிழாக்கள் பிரசித்தி பெற்றது. 
மாசிமக திருவிழாவை முன்னிட்டு கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல், காலசந்தி பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து குவிந்தனர். பால்குடம் எடுத்து வந்தும், வாயில் அலகு குத்தி ஏந்தி வந்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

பால்குட ஊர்வலம்

பால்குடம் ஊர்வலம் கோவில் மேல வாசலில் இருந்து புறப்பட்டு கிரி பிரகாரம் மேலரத வீதி, ஆறுமுகம் நகர், கிரி பிரகார கீழ ரத வீதி, நாராயணசாமி கோவில் தெரு, கீழ பஜார் மற்றும் தெற்கு ரத வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. மதியம் ஒரு மணிக்கு பக்தர்கள் எடுத்து வந்த பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும், சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Next Story