சங்கிலி திருடிய பெண் கைது
திருச்செந்தூரில் சங்கிலி திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர், பிப்:
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகன் பாலமுருகன் (வயது 36). இவர் சென்னையில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசரேத் பகுதியில் தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். மாசி திருவிழா தேரோட்டம் பார்ப்பதற்கு தனது தாய் மற்றும் சித்தி ஆகியோருடன் பாலமுருகன் திருச்செந்தூர் வந்துள்ளார். அவரது சித்தியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுந்து விட்டதால் அதை பேப்பரில் மடித்து பாலமுருகன் தனது சட்டைப்பையில் வைத்துள்ளார். பின்னர் திருச்செந்தூரில் பஸ் ஏறும்போது பாலமுருகன் சட்டைப்பையில் இருந்த 2¾ பவுன் தங்க சங்கிலியை, கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த மிக்கேல் என்பவரின் மனைவி கனி (எ) மல்லிகா (30) திருட முயற்சிக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். இதுகுறித்த பாலமுருகன் அளித்த புகாரின் பெயரில் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவை கைது செய்தார்.
Related Tags :
Next Story