ஸ்ரீபெரும்புதூரில் ரூ.6.68 கோடியில் ராமானுஜருக்கு மணி மண்டபம் திறப்பு


ஸ்ரீபெரும்புதூரில் ரூ.6.68 கோடியில் ராமானுஜருக்கு மணி மண்டபம் திறப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 8:28 PM IST (Updated: 27 Feb 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

ஆன்மிக மகான் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரில் ரூ.6.68 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூரில் பஸ் நிலையம் அருகே சுமார் 2.77 ஏக்கர் பரப்பளவில் மணி மண்டபம், வேதபாடசாலை, அன்னதான கூடம், தங்கும் விடுதி, கழிவறைகள், திருக்குளம் ‌என அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கட்டிமுடிக்கப்பட்ட ஸ்ரீராமானுஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். அதனைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன் குத்துவிளக்கேற்றி ராமானுஜர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, காஞ்சீபுரம் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் எஸ்.செந்தில்ராஜன், காஞ்சீபுரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் போந்தூர் எஸ். சேட்டு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story