பள்ளி கிச்சன் கார்டன்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு காய்கறி
பள்ளி கிச்சன் கார்டன்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு காய்கறி வழங்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம்,
பள்ளி கிச்சன் கார்டன்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு காய்கறி வழங்கப்பட்டு வருகிறது.
உத்தரவு
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் ஊராட்சி பகுதியில் உள்ள பள்ளி வளாகங்களில் காய்கறி மற்றும் கீரை வளர்ப்பை ஊக்கு விக்கும் வகையில் 1000 கிச்சன் கார்டன்கள் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் பிரதீப் குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருப்புல்லாணி யூனியனில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மல்லிகா, ரவி ஆகியோரின் உத்தரவின்பேரில் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் மேற்பார்வையில் அரசு பள்ளி வளாகங்களில் காய்கறி, கீரை வகைகள், முருங்கை, பப்பாளி, கருவேப்பிலை போன்ற பயன்தரும் செடிகள், மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்படுகின்றன.
பாதிப்பு
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த கீரை, காய்கறிகள் வழங்குவதன் மூலம் வளர் இளம் பெண் குழந்தைகளுக்கு ரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதும், நெடுங்கால பயனாக மகப்பேறு கால இறப்பு விகிதம் குறைத்து, தாய்-சேய் நலம் உறுதி செய்வதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி இந்த தோட்டங் களில் விளைந்த காய்கறி, கீரை வகைகளை பள்ளி குழந்தை களுக்கும், வளர் இளம்பெண்களுக்கும், அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார மையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
காய்கறி
யூனியன் ஆணையாளர்கள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் காய்கறிகளை வழங்கினர். இந்த நிகழ்வின்போது ஊராட்சி துணைத்தலைவர் ஜெகத்ரட்சகன், யூனியன் கவுன்சிலர் நாகநாதன், ஊராட்சி செயலாளர் உதயகுமார் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story