வெறிச்சோடிய பஸ் நிலையம்
தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் பஸ் நிலையம் வெறிச்சோடியது
முதுகுளத்தூர்,
ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தரபணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் ஏற்படாத நிலையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக அரசு பஸ்கள் ஓடதாதால் முதுகுளத்தூர் பஸ் நிலையம் வெறிச்சோடியது. இதனால் பொதுமக்கள் வெளியூருக்கு செல்ல மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் அ.தி.மு.க. தொழிற்சங்கமான ஏ.பி.டி. தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் ஒரு சில பஸ்சை மட்டும் இயக்கி வருகின்றனர். தனியார் பஸ் வழக்கம்போல் இயக்கி வருகிறது.
Related Tags :
Next Story