செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற சினிமா படப்பிடிப்பு


செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற சினிமா படப்பிடிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 9:10 PM IST (Updated: 27 Feb 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

மண்டபம் கடற்கரை பூங்காவில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற சினிமா படப்பிடிப்பு நடந்தது

பனைக்குளம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் கடற்கரை பூங்காவில் கடந்த 2 நாட்களாக சாணிக்காயிதம் என்ற தமிழ் சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த  சினிமா படப்பிடிப்பில் டைரக்டரும் நடிகருமான செல்வராகவன் மற்றும் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் ஒரு வேனில் இருந்து இறங்கி கடற்கரையில் நடந்து வருவது போன்று காட்சி படமாக்கப்பட்டது. இந்த படத்தை டைரக்டர் அருண் மாதேசுவரன் இயக்குகிறார். இன்னும் 2 வாரம் மண்டபம், பாம்பன் குந்துகால் கடற்கரையில் பிரப்பன்வலசை, உச்சிப்புளி, அரியமான் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்திற்கான சினிமா படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
மண்டம் கடற்கரை பூங்காவில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பிற்காக வந்துள்ள நடிகை கீர்த்தி சுரேசை காண ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அங்கு குவிந்து வருகின்றனர். 

Next Story