வைக்கோல் லோடுடன் தீப்பிடித்து எரிந்த டிராக்டர்
வைக்கோல் லோடுடன் டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது.
பெண்ணாடம்,
பெண்ணாடம் பகுதியில் தற்போது நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இதில் பெண்ணாடம் அடுத்த மதுரவல்லி கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் விவசாயி ஒருவரிடம் இருந்து 200-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுக்களை விலை கொடுத்து வாங்கினார்.
இதில் 70 கட்டுக்களை டிராக்டரில் ஏற்றினார். பின்னர் அந்த டிராக்டர் வயல் பகுதியில் இருந்து வெளியே வந்த போது, அந்த வழியாக சென்ற உயர் மின் கம்பி வைக்கோல் கட்டு மீது உரசியது. இதில் வைக்கோல் கட்டுகள் முழுவதும் தீ பிடித்து எரிந்தது.
உடன் அங்கிருந்த விசாயிகள் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் முழுவதும் எரிந்ததுடன், டிராக்டரின் ஒரு பகுதி எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story