மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: அரசு போக்குவரத்து கழக அதிகாரி பலி
பல்லடத்தில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரி பலியானார்.
பல்லடம்
பல்லடத்தில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரி பலியானார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அதிகாரி
கோவை, நீலிகோணம்பாளையம் நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் (வயது 56). இவர் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முதுநிலை தணிக்கையாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து, வீட்டுக்கு செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளில் திருப்பூரிலிருந்து நீலிகோணம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லடத்தை அடுத்த பெரும்பாளி என்ற இடத்தில் பிரகாசம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கோவையிலிருந்து பல்லடம் நோக்கி டேங்கர் லாரி ஒன்று வந்தது.
பலி
கண் இமைக்கும் நேரத்தில் பிரகாசம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரகாசத்தை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பிரகாசம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story