திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளுக்கு தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளுக்கு தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 27 Feb 2021 5:19 PM GMT (Updated: 27 Feb 2021 5:19 PM GMT)

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளுக்கு தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி

திருக்கோவிலூர்

ஒவ்வொரு ஆண்டும் மாசிகமத்தின் போது திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளுக்கு கடலூர் தேவனாம்பட்டினம் கடலில் தீர்த்தவாரி நடைபெறும். ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டு தீர்த்தவாரிக்காக உலகளந்த பெருமாள் தேவனாம்பட்டிம் கடற்கரைக்கு புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு மாற்றாக திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றிலேயே சாமிக்கு தீர்த்தவாரி நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை உற்சவர் உலகளந்த பெருமாளுக்கு  தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

தொடர்ந்து கோவில் மடாதிபதிகள் முன்னிலையில் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சாமி கோவில் ஆஸ்தானம் எழுந்தருளினார். மாலையில் கருடசேவை வீதிஉலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் விழாக்குழுவினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர். மாசிமகத்தையொட்டி திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் தென்பெண்ணையாற்றில் புனித நீராடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது இதுவே முதல் முறையாகும். 
அசம்பாவித சம்பவங்களை தடுக்க திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவ ச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story