தொப்பூர் கணவாயில் வெங்காய பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது. இதில் 2 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.


தொப்பூர் கணவாயில் வெங்காய பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது. இதில் 2 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.
x
தினத்தந்தி 27 Feb 2021 5:38 PM GMT (Updated: 27 Feb 2021 5:38 PM GMT)

தொப்பூர் கணவாயில் வெங்காய பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது 2 டிரைவர்கள் காயம்

நல்லம்பள்ளி:
குஜராத் மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு வெங்காய பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் வினோத்குமார் (வயது 30) ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக அதே மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் (40) உடனிருந்தார். தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே வந்த போது  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர்கள் காயம் அடைந்தனர். மேலும் லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் சரிந்து கீழே விழுந்தன. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து பணியாளர்கள் டிரைவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story