ரூ.39 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்- கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்


ரூ.39 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்- கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Feb 2021 11:18 PM IST (Updated: 27 Feb 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.39 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

ஓட்டப்பிடாரம், பிப்:
ஓட்டப்பிடாரம் அருகே ரூ.39 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை, கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

சமுதாய நலக்கூடம்

ஓட்டப்பிடாரம் அருகே கலப்பைபட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, புதிய சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர், குலசேகரநல்லூரில் ரூ.14 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட தெப்பக்குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ., மாநில மாணவர் அணி இணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ஜெயக்கொடி, தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை அரங்கம் போன்ற பல்வேறு வசதிகள் இருந்தும் இப்பகுதியில் உள்ள சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய டயாலிசிஸ் எந்்திரம் இல்லாத நிலையில் தூத்துக்குடி, திருச்செந்தூர், போன்ற பகுதிகளுக்கு அவர்கள் சென்று வரக்கூடிய சிரமத்தில் இருந்தனர். இதுெதாடர்பாக காயல்பட்டினம் ஐக்கிய பேரவை மற்றும் காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்ததின் பேரில், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தனது உள்ளூர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து 2 டயாலிசிஸ் எந்திரங்கள் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியற்றுக்கு ரூ.26 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதனை தொடர்ந்து டயாலிசிஸ் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி. டயாலிசிஸ் எந்திரம் உள்ள அறைகளை திறந்துவைத்து எந்திரங்களை பார்வையிட்டார். மருத்துவமனை டாக்டர்கள் ராணிடப்ஸ், நிக்சன் ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஐ.காதர், நகர துணை செயலாளர் கதிரவன், முகமது முகைதீன், இளைஞரணி செயலாளர் கலீலுர் ரஹ்மான், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாகுல் அமீது, முஸ்லிம் ஐக்கிய பேரவை செயலாளர் வாவு சம்சுதீன், பொதுச் செயலாளர் நவாஸ், காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சாலை சலீம், செயலாளர் கண்ணன், ஹாங்காங் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் ஜமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அங்கன்வாடி கட்டிடம்

ஆறுமுகநேரி காந்தி தெருவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி கட்டிடத்தில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் படித்து வந்தனர். கடந்த ஆண்டு அந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் அப்பள்ளியில் படித்த அங்கன்வாடி குழந்தைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். அந்த இடத்தில் மீண்டும் புதிதாக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தனது உள்ளூர் தொகுதி வளர்ச்சி நிதியை நிதி ஒதுக்கீடு செய்தார். பணிகள் முடிந்து புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

விழாவில் ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொறுப்பாளர் மாரியம்மாள் அனைவரையும் வரவேற்றார்.

Next Story