ஓடும் ஆம்புலன்சில் குவா குவா
ஒடுகத்தூர் அருகே ஓடும் ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது.
அணைக்கட்டு
ஒடுகத்தூர் அருகே ஓடும் ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது.
அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை சாத்தான்குளம் மலை கிராமத்தை சேர்ந்தவர் திருமால். அவரது மனைவி ரோஜா (22 வயது). நிறைமாத கர்ப்பிணியான ரோஜாவுக்கு நேற்று காலை பிரசவவலி ஏற்பட்டது.
இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவ உதவியாளர் சவுமியா மற்றும் ஓட்டுநர் நேதாஜி ஆகியோர் ஆம்புலன்சில் விரைந்தனர்.
திருமால் வசிக்கும் பகுதிக்கு ஆம்புலன்ஸ் செல்ல சாலை வசதி இல்லாததால் ரோஜாவை அவரது உறவினர்கள் தூக்கிக்்கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றினர். பின்னர் ஆம்புலன்ஸ் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
எழந்தபுதூர் கிராமத்தை கடந்து செல்லும் வழியில் பிரசவவலி அதிகரித்து ரோஜாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அதைத் தொடர்ந்து தாயும், சேயும் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
Related Tags :
Next Story