அங்காளபரமேஸ்வரி அம்மன் தெப்ப உற்சவம்


அங்காளபரமேஸ்வரி அம்மன் தெப்ப உற்சவம்
x
தினத்தந்தி 27 Feb 2021 11:34 PM IST (Updated: 27 Feb 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.

மானாமதுரை,

.மானாமதுரையில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து கொண்டு கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு கோவிலுக்குள் உள்ள தெப்ப குளத்தில் தெப்ப சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளினார். தெப்பக்குளத்திற்குள் அம்மன் தெப்ப உற்சவம் நடந்தது. இதை திரளானோர் கண்டு தரிசித்தனர். பலர் தெப்பக்குளத்தின் கரையோரத்தில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

Next Story