கோடை நடவு பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்


கோடை நடவு பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
x
தினத்தந்தி 27 Feb 2021 11:54 PM IST (Updated: 27 Feb 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

கோடை நடவு பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

ஆதனக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடியை அறுவடை செய்த பிறகு விவசாயிகள் தற்போது கோடை நடவு சாகுபடியை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெல் சாகுபடி அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் பல விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர். தொடர் மழையால் நெல் மணிகள் மழையில் நனைந்து முளைத்ததோடு நெற் கதிர்களை அறுக்க முடியாமல் போனது. பருவம் தவறி அறுவடை செய்ததால் சரியான விலை கிடைக்காமலும், பெரிய நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்தாலும், தொடர்ந்து நல்ல மழை பெய்ததன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பின. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கோடை சாகுபடி பனியைத் தற்போது தொடங்கியுள்ளனர்.

Next Story