மாணவர்களின் நலன் கருதி மாற்றுப்பள்ளிகளில் பாடம் நடத்த 13 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்


மாணவர்களின் நலன் கருதி மாற்றுப்பள்ளிகளில் பாடம் நடத்த 13 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்
x
தினத்தந்தி 27 Feb 2021 6:25 PM GMT (Updated: 27 Feb 2021 6:25 PM GMT)

மாணவர்களின் நலன் கருதி மாற்றுப்பள்ளிகளில் பாடம் நடத்த 13 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்
மாணவர்களின் நலன் கருதி மாற்றுப்பள்ளிகளில் பாடம் நடத்த 13 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
13 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் 
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் நியமிக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில் மாணவர்களின் நலன் கருதி திருப்பூர் மாவட்டத்தில் 13 முதுகலை ஆசிரியர்கள் மாற்றுப்பள்ளிகளில் வாரந்தோறும் சிலர் 2 நாட்களும், சிலர் 1 நாட்களும் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.
கானூர்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த முதுகலை ஆசிரியர் (தமிழ்) சுதா, மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், குண்டடம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) ஆக்னஸ் தீபா, குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (கணிதம்) சுமதி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், பொல்லிகாளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (கணிதம்) ராஜேஸ்வரி, அருள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (இயற்பியல்) முருகேசன், குண்டடம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கும், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (பொருளியல்) பிரபாகரன், அருள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் நியமிக்கப்படுகின்றனர்.
பாடம் நடத்த...
இதுபோல் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (பொருளியல்) சுமதி, பத்மாவதிபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கும், அவினாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (வணிகவியல்) சிவகுரு, திருப்பூர் குமார்நகர் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கும், ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (பொருளியல்) ராஜலட்சுமி, திருப்பூர் சின்னச்சாமி அம்மாள் நகராட்சி பள்ளிக்கும், கேத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (வணிகவியல்) ராமமூர்த்தி, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும்.
திருப்பூர் பழனியம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) ராஜபிரீத்தி, புதுராமகிருஷ்ணாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கும், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கணினி பயிற்றுநர் கணேசன், திருப்பூர் சின்னச்சாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கும், கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி கணினி பயிற்றுநர் வெங்கடாச்சலம், தெக்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் நியமிக்கப்படுகிறார்கள். 
இந்த ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று மாணவர்களின் நலன் கருதி பாடம் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story