வைக்கோலுக்கு தீ வைப்பு


வைக்கோலுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 28 Feb 2021 12:00 AM IST (Updated: 28 Feb 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் அருகே வைக்கோலுக்கு தீ வைக்கப்பட்டது.

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே சாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் மாட்டு தீவனத்துக்காக வைக்கோல் போர் அடுக்கி வைத்துள்ளார். சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் அஜீத் (26) வைக்கோலுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றதாக தெரிகிறது. இதை பார்த்த சத்தியமூர்த்தி காளையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து வைக்கோலுக்கு தீ வைத்த அஜீத்தை தேடி வருகின்றனர்.

Next Story