கோ வேக்சின்தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்களின் விவரம் சேகரிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் கோ வேக்சின்தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் 4 ஆயிரத்து 300 டோஸ் கைவசம் இருப்பு உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கோ வேக்சின்தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் 4 ஆயிரத்து 300 டோஸ் கைவசம் இருப்பு உள்ளது.
4 ஆயிரத்து 300 டோஸ்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா வைரஸ் பரவுதல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இருப்பினும் முழுவதுமாக கொரோனா தொற்று குறையவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை நாள் ஒன்றின் பாதிப்பு 500 என்ற அளவிற்கு இருந்து வந்தது. ஆனால் தற்போது நாள் ஒன்றின் பாதிப்பு 15-க்கும் குறைவாகவே உள்ளது.
இதுபோல் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசியும் மாவட்டம் முழுவதும் போடப்பட்டு வருகிறது. இதற்காக 13 ஆயிரத்து 300 டோஸ் (கோவி ஷீல்டு) திருப்பூருக்கு வந்தது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு இந்த தடுப்பூசியும் போடப்பட்டு விட்டது. தற்போது 2-வது கட்டமாக கோ வேக்சின் 4 ஆயிரத்து 300 டோஸ் திருப்பூருக்கு வந்துள்ளது.
விவரம் சேகரிப்பு
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்திற்கு 2-வது கட்டமாக கோ வேக்சின் 4 ஆயிரத்து 300 டோஸ் வந்துள்ளது. பயனாளிகளின் விருப்பத்தின் பேரில் தான் கோ வேக்சின் போடப்படும். இது தொடர்பாக அவர்கள் உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும். தற்போது கோ வேக்சின் போடுவதற்கு ஒரு சிலர் முன்வந்துள்ளனர். இருப்பினும் இது கோவி ஷீல்டு போல அல்ல.
ஒரு பாட்டிலில் இருக்கும் கோ வேக்சின் மூலம் 20 பேருக்கு ஊசி போட முடியும். கோ வேக்சின் சிக்கனமாகவும், சரியாகவும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே குறைந்தது கோ வேக்சின் போடுவதற்கு 20 பேர் வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊசி போட முடியும். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் கோ வேக்சின் போட விருப்பமுள்ளவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். 20 பேர் சேர்ந்ததும் ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் அனைவருக்கும் கோ வேக்சின் போடப்படும். திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மட்டுமே கோ வேக்சின் போடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story