சாத்தனூர் அணை தண்ணீர் மூங்கில்துறைப்பட்டுக்கு வந்தது


சாத்தனூர் அணை தண்ணீர் மூங்கில்துறைப்பட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 27 Feb 2021 6:38 PM GMT (Updated: 27 Feb 2021 6:38 PM GMT)

சாத்தனூர் அணை தண்ணீர் மூங்கில்துறைப்பட்டுக்கு வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

மூங்கில்துறைப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் அணை உள்ளது. 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 111 அடி தண்ணீர் உள்ளது. 
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதி மற்றும் மார்ச் மாதங்களில் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த வகையில் சாத்தனூர் அணையிலிருந்து வலதுபுற கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 200 கனஅடி வீதம் 90 நாட்களுக்கு  தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட வுள்ளது. இந்த தண்ணீரானது விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையான மூங்கில்துறைப்பட்டு இளையாங்கண்ணி கூட்ரோடு பகுதிக்கு வந்தடைந்தது.  அங்கிருந்து வலதுபுற கால்வாய் வழியாக கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் உள்ள 48 ஏரிகளுக்கு இந்த தண்ணீர் செல்லும்.  இதன் மூலம் 2,500 ஹெக்டர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது பயிர் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story