3 எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு


3 எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு
x
தினத்தந்தி 28 Feb 2021 1:20 AM IST (Updated: 28 Feb 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

மயிலாடுதுறை:
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
 சீல் வைப்பு
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அரசியல் கட்சிகளுக்கும் அரசுக்கும் சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
 அதன்படி நேற்று மதியம் 1 மணியளவில் அலுவலர்களுடன் தாசில்தார் பிரான்சுவா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான கோப்புகள் மற்றும் தளவாட பொருட்களை அ.தி.மு.க.வினர் வேன் மூலம் வெளியே கொண்டு சென்றனர். அதன்பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பூட்டிய தாசில்தார் அதற்கு சீல் வைத்தார்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாக 2 நுழைவு வாயில்களையும் பூட்டி சீல் வைத்தார். அப்போது அவருடன் வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, நகராட்சி ஆய்வாளர்கள் சிங்காரவேலு, பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யா மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.
சீர்காழி
சீர்காழி சட்டமன்ற அலுவலகம், தாசில்தார் ஹரிஹரன் தலைமையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அப்போது வருவாய் ஆய்வாளர் பொன்னிவளவன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன், உதவியாளர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பொறையாறு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு தரங்கம்பாடி தாசில்தார் இளங்கோவன் நேற்று அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார். அப்போது அவருடன் வருவாய் ஆய்வாளர் ரகு, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story