பாளையங்கோட்டை அருகே தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்து வடமாநில பெண் சாவு

பாளையங்கோட்டை அருகே தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்து வடமாநில பெண் சாவு
x
தினத்தந்தி 28 Feb 2021 4:02 AM IST (Updated: 28 Feb 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை அருகே தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்ததில் வடமாநில பெண் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை:
பாளையங்கோட்டை அருகே தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்ததில் வடமாநில பெண் பரிதாபமாக இறந்தார்.

வடமாநில பெண்

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சர்தார். இவருடைய மனைவி அர்ச்சனா (வயது 21). இவர்கள் பாளையங்கோட்டை அருகே உள்ள மணக்காடு கிராமத்தில் ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.

நேற்று மாலை அர்ச்சனா அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே அமர்ந்து பாத்திரம் சுத்தம் செய்து கொண்டிருந்தார். 

பரிதாப சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்ததில் அர்ச்சனா பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story